உள்ளூர் செய்திகள்

வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு

Published On 2023-01-20 15:09 IST   |   Update On 2023-01-20 15:09:00 IST
  • தாரமங்கலம் ஊராட்சி ஒன்றி யத்தில் நடைபெற்றுவரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் கார்மேகம் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.
  • ஒன்றியத்தில் மொத்தம் ரூ.43.06 கோடி மதிப்பீட்டிலான 1,428 எண்ணிக்கையிலான வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சேலம்:

சேலம் மாவட்டம் தாரமங்கலம் ஊராட்சி ஒன்றி யத்தில் நடைபெற்றுவரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் கார்மேகம் பார்வையிட்டு ஆய்வுசெய்தார். அப்போது அவர் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, மின்சார வசதி, சாலை வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட வசதிகளை நிறைவேற்றித்தர துறை அலுவலர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

ஒன்றியத்தில் மொத்தம் ரூ.43.06 கோடி மதிப்பீட்டிலான 1,428 எண்ணிக்கையிலான வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் குருக்குப்பட்டியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் பவளத்தானூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு ரூ.12.51 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுவரும் கட்டடத்தினை கலெக்டர் கார்மேகம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளை தரமாகவும், குறிப்பிட்ட கால அளவிற்குள்ளும் முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டுமென அதிகாரிகளை அவர் கேட்டுக்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி, உதவிப் பொறியாளர்கள் கண்ணன், சீனிவாசன், குருக்குப்பட்டி ஊராட்சிமன்றத்தலைவர் வெங்கடாச்சலம் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News