உள்ளூர் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்ட தென்னை விவசாயிகள்.

தென்னை விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்

Published On 2023-07-23 15:49 IST   |   Update On 2023-07-23 15:49:00 IST
  • தென்னை விவசாயிகளை காப்பாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய்யை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பேராவூரணி:

தேங்காய் விலை கடும் வீழ்ச்சி எதிரொலியாக விரக்தியில் இருக்கும் தென்னை விவசாயிகளுக்கு அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என வலியுறுத்தி பேராவூரணி வேதாந்தம் திடலில் கிழக்கு கடற்கரை தென்னை விவசாயிகள் சங்க தலைவர் காந்தி தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. உண்ணாவிரத போராட்டத்தை தமிழ்நாடு கள் இயக்கம் ஈரோடு கள ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தொடங்கி வைத்தார். இதில் போராவூரணி பகுதியை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

தொடர்ந்து, இதுகுறித்து கிழக்கு கடற்கரை தென்னை விவசாயிகள் சங்க தலைவர் காந்தி கூறியதாவது:-

தமிழக அரசு தென்னை விவசாயிகளை காப்பாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய்யை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு பள்ளிகளில் காலை, மதியம் சத்துணவில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்த உத்தரவிட வேண்டும். தென்னை சார்ந்த உற்ப்பத்தி பொருட்களை உள்நாடுகளில் விற்பனை செய்யவும், வெளிநாட்டு ஏற்றுமதிக்கும் அரசு உதவி செய்ய வேண்டும் என்றார்.

போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News