உள்ளூர் செய்திகள்
முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா- 570 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
- பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
- பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் நகர திமுக சார்பில் முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் நகரக் கழக செயலாளர் மாவட்ட பொருளாளர் மாமல்லபுரம் வெ. விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள், பெண்களுக்கு புடவை, இட்லி குக்கர், தையல்மிஷின் என, 570 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
கூட்டத்தில் மாமல்லபுரம் பேரூராட்சி தி.மு.க கவுன்சிலர்கள் மோகன்குமார், பூபதி, சீனிவாசன் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.