உள்ளூர் செய்திகள்

காரைக்கால் அருகே கொடுக்க வேண்டிய பணத்திற்காக மோட்டார் சைக்கிளை தூக்கிச்சென்றதால் மோதல்: 4 பேர் மீது போலீசார் வழக்கு

Published On 2023-07-29 07:29 GMT   |   Update On 2023-07-29 07:29 GMT
  • வசந்தகுமார் என்பவர் சிலிண்டர் போடும் வேலை செய்துவந்தார்.
  • அங்கிருந்த வினோத்தை தாக்கிவிட்டு, மோட்டார் சைக்கிளுடன் சென்றுவிட்டனர்.

புதுச்சேரி:

காரைக்காலை அடுத்த நெடுங்காடு மேலகாசாகுடி பகுதியைச்சேர்ந்தவர் வினோத் (வயது43). இவரிடம், மேலகாசாகு டியைச்சேர்ந்த வசந்தகுமார் (30) என்பவர் சிலிண்டர் போடும் வேலை செய்துவந்தார். வசந்தகுமார், காரைக்கால் தனியார் ஆஸ்பத்திரி கேண்டீனுக்கு சிலிண்டர் போடுவதில், ரூ.2 லட்சம் வினோத்துக்கு கொடுக்க வேண்டியு ள்ளதாக கூறப்படு கிறது. பலமுறை கேட்டும் வசந்த குமார் பணம் தராததால், தனது கம்பெனியில் வேலை செய்யும் ராஜசேகர் என்பவர் மூலம், வசந்தகுமாரின் மோட்டர் சைக்கிளை வினோத் எடுத்து சென்றார்.

இதனால், ஆத்திரம் அடைந்த வசந்தகுமார், அவரது அண்ணன் வசந்தராஜா (38), அண்ணி இலக்கியா (30) ஆகிய 3 பேரும், வினோத் வீட்டுக்கு சென்று, வினோத்தை ஆபாசமாக திட்டி, அங்கிருந்த வினோத்தை தாக்கிவிட்டு, மோட்டார் சைக்கிளுடன் சென்றுவிட்டனர். இதில் காயம் அடைந்த வினோத், நெடுங்காடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். மேல் சிகிச்சைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அரசு ஆஸ்பத்திரியில் வினோத் போலீசாரிடம் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அதேபோல், இலக்கியா என்பவர் நெடுங்காடு போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், தனது வீட்டில் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளை, வினோத் என்பவர் எங்களை கேட்காமல் எடுத்து சென்றதால், நான், எனது கணவர் வசந்தராஜா, அவரது தம்பி வசந்தகுமார் ஆகியோர் வினோத் வீட்டுக்கு சென்று கேட்ட போது, வினோத் வசந்த ராஜாவை தாக்கினார். தடுக்கசென்ற வசந்தகுமாரையும் தாக்கினார். என்னை சேலையை பிடித்து இழுத்து மானபங்கம் செய்துவிட்டார். மேலும், கொலைமிரட்டலும் விடுத்துள்ளதால், அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார். போலீசார் இலக்கிய புகார்மீது வழக்கு பதிவு செய்து வினோத்தை விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News