உள்ளூர் செய்திகள்

கும்மனூர் கிராமத்தில் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை பர்கூர் எம்.எல்.ஏ. மதியழகன் தொடங்கி வைத்த போது எடுத்தபடம்.

பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு தேவைப்படும் தென்னங்கன்று, வேப்பமரக்கன்றுகளை வனத்துறையிடம் இலவசமாக பெற்று கொள்ளலாம்- எம்.எல்.ஏ. மதியழகன் தகவல்

Published On 2022-07-21 14:48 IST   |   Update On 2022-07-21 14:48:00 IST
  • திப்பனப்பள்ளி பஞ்சா யத்தை பசுமையாக்கும் வகையில், 2 ஆயிரம் மரக்கன்றுகள் நட திட்டமிட்டுள்ளது.
  • பொதுமக்கள் அனைவரும் தங்கள் காலி நிலங்கள் மற்றும் சாலை ஓரங்களில் மரக்கன்றுகளை நட்டு, சுத்தமான காற்றுடன் பசுமையான பகுதியாக மாற்ற பாடுபட வேண்டும்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் திப்பனப்பள்ளி பஞ்சாயத்திற்குட்பட்ட கும்மனூர் கிராமத்தில் நேரு யுவகேந்திரா, காந்தி இளைஞர் நற்பணி மன்றம் இணைந்து நடத்திய மரக்கன்றுகள் நடும் விழா நேற்று நடந்தது.

இந்த விழாவிற்கு கும்மனூர் ஊராட்சி மன்றத் தலைவர் கிருஷ்ணவேணி கிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக பர்கூர் எம்.எல்.ஏ., மதியழகன் பங்கேற்று, மரக்கன்று நடும் நிகழ்ச்சியினை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

திப்பனப்பள்ளி பஞ்சா யத்தை பசுமையாக்கும் வகையில், 2 ஆயிரம் மரக்கன்றுகள் நட திட்டமிட்டுள்ளது. மரம் இருந்தால் தான் மழை பொழியும். மழை பொழிந்தால் தான் நிலம் பசுமை பெறும்.

எனவே பொதுமக்கள் அனைவரும் தங்கள் காலி நிலங்கள் மற்றும் சாலை ஓரங்களில் மரக்கன்றுகளை நட்டு, சுத்தமான காற்றுடன் பசுமையான பகுதியாக மாற்ற பாடுபட வேண்டும்.

பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு தேவைப்படும் தென்னங்கன்று, வேப்பம் உள்ளிட்ட மரக்கன்றுகளை வனத்துறையினர் இலவ சமாக வழங்குகின்றனர். இந்த வாய்ப்பை பயன்படுத்தி மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். பின்னர் நேரு யுவகேந்திரா, காந்தி இளைஞர் மன்றம் சார்பில் கும்மனூர் பகுதி இளைஞர்களுக்கு, ரூ.4 ஆயிரம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்களை அவர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்குமார், நேரு யுவகேந்திராவை கணக்காளர் அப்துல் காதர், கிழக்கு மாவட்ட தி.மு.க பொருளாளர் ராஜேந்திரன், வனத்துறை அலுவலர்கள் குமார், சக்திவேல், சோமசேகர், வருவாய் ஆய்வாளர் ஜெயபாரதி, கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News