உள்ளூர் செய்திகள்

செல்போன் தடை குறித்து நெல்லையப்பர் கோவிலில் பக்தர்களுக்கு விளக்கி கூறிய பணியாளர்.

செல்போன் தடை உத்தரவு எதிரொலி-நெல்லையப்பர் கோவிலில் பக்தர்களுக்கு அறிவுரை வழங்கிய பணியாளர்கள்

Published On 2022-12-03 09:29 GMT   |   Update On 2022-12-03 09:29 GMT
  • நெல்லையப்பர் கோவிலில் இன்று முதல் பக்தர்களுக்கு செல்போன் தடை குறித்த அறிவுறுத்தலை பணியாளர்கள் தெரிவித்தனர்.
  • கோவிலுக்குள் சென்று புகைப்படம் எடுக்கவோ, செல்போனில் பேசவோ செய்ய வேண்டாம் என பணியாளர்கள் கூறினர்.

நெல்லை:

கோவில்களில் தூய்மை மற்றும் புனிதத்தை காக்கும் வகையில் செல்போன் தடை, ஆடை கட்டுப்பாடுகளை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் அமல்படுத்த வேண்டும் என்று சமீபத்தில் ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.

இதனை ஒட்டி இந்து சமய அறநிலைய துறையின் நெல்லை மண்டல இணை ஆணையர் கவிதா அறிவுறுத்தலின் பேரில் நெல்லை மாவட்டத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு கீழ் வரும் கோவில்களில் வழிபட வரும் பக்தர்களுக்கு செல்போன் தடை குறித்து கோவில் பணியாளர்கள் அறிவுறுத்தினர்.

டவுன் நெல்லையப்பர் கோவிலில் இன்று காலை முதல் பக்தர்களுக்கு செல்போன் தடை குறித்த அறிவுறுத்தலை பணியாளர்கள் தெரிவித்தனர்.

விரைவில் டோக்கன் வழங்கி பக்தர்களின் செல்போன்கள் பத்திரமாக பாதுகாக்கப்படும் என்றும், இனி கோவிலுக்குள் சென்று புகைப்படம் எடுக்கவோ, செல்போனில் பேசவோ செய்ய வேண்டாம் என்று அவர்கள் பக்தர்களிடம் அறிவுறுத்தினர்.

Tags:    

Similar News