உள்ளூர் செய்திகள்

விழாவில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

சாரதா மகளிர் கல்லூரியில் உலக தாய்ப்பால் வாரம் கொண்டாட்டம்

Published On 2022-08-05 09:40 GMT   |   Update On 2022-08-05 09:40 GMT
  • கல்லூரியின் செஞ்சுருள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் பொருளியல் துறை உதவி பேராசிரியருமான மிருணா தேவி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார்.
  • மூன்றாம் ஆண்டு கணிதவியல் துறை மாணவி வைஷ்ணவி தொகுத்து வழங்கினார்.

நெல்லை:

நெல்லை அரியகுளம் ஸ்ரீ சாரதா மகளிர் தன்னாட்சி கல்லூரியில் உலக தாய்ப்பால் வாரத்தை யொட்டி 'தாய்ப்பால் புகட்டலின் ஆதரவும் ஊக்குவிப்பும்' என்னும் பொருண்மையில் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியினை கல்லூரியின் செஞ்சுருள் இயக்கமும், இளைேயார் செஞ்சிலுவை சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

கல்லூரி செயலர் யதீஸ்வரி சரவணபவ ப்ரியா அம்பா ஆசியோடு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் துணை முதல்வரும், பொருளியல் துறை தலைவருமான கலாவதி வரவேற்று பேசினார். கல்லூரியின் செஞ்சுருள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் பொருளியல் துறை உதவி பேராசிரியருமான மிருணா தேவி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார்.

நெல்லை சித்த மருத்துவ கல்லூரியின் பேராசிரியரான கோமலவள்ளி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, 'தாய்ப்பால் புகட்டலின் ஆதரவும் ஊக்குவிப்பும்' என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.

தொடர்ந்து மாணவிகளோடு கலந்துரையாடல் நிகழ்த்தினார். மாணவிகளின் சந்தேகங்களுக்கு தக்க விளக்கம் அளித்தார். இளையோர் செஞ்சிலுவை சங்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், தகவல் தொழில்நுட்பத்துறை உதவி பேராசிரியருமான உஷா நன்றி கூறினார்.

இந்த நிகழ்ச்சியினை மூன்றாம் ஆண்டு கணிதவியல் துறை மாணவி வைஷ்ணவி தொகுத்து வழங்கினார். இதில் கல்லூரியின் செஞ்சுருள் இயக்கம் மற்றும் இளையோர் செஞ்சிலுவை சங்க மாணவிகளும், இளநிலை மூன்றாம் ஆண்டு மற்றும் முதுநிலை இரண்டாம் ஆண்டு மாணவிகளும் கலந்து கொண்டு விழிப்புணர்வு பெற்றனர்.

Tags:    

Similar News