உள்ளூர் செய்திகள்

களக்காடு அருகே அனுமதியின்றி செங்கல் சூளை நடத்தியவர் மீது வழக்கு

Published On 2022-06-15 09:47 GMT   |   Update On 2022-06-15 09:47 GMT
  • நாங்குநேரி தாசில்தார் இசக்கிபாண்டி மற்றும் வருவாய்துறை செங்கல்சூளையில் ஆய்வு.
  • செங்கல்சூளைக்கு 10 அடி ஆழத்தில் மண் எடுக்கப்பட்டது தெரியவந்தது.

களக்காடு:

திருக்குறுங்குடி அருகே உள்ள மலையடிபுதூரில் அனுமதி இன்றி செங்கல்சூளை நடத்தப்பட்டு வருவதாக வருவாய்துறையினருக்கு புகார்கள் சென்றது. இதனை தொடர்ந்து நாங்குநேரி தாசில்தார் இசக்கிபாண்டி மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் மலையடிபுதூரில் இயங்கி வந்த செங்கல்சூளையில் ஆய்வு நடத்தினர்.

அதில் செங்கல்சூளை அனுமதி இன்றி நடத்தப்பட்டதும், செங்கல்சூளைக்கு 10 அடி ஆழத்தில் மண் எடுக்கப்பட்டதும் தெரியவந்தது.

இதுபற்றி நாங்குநேரி மண்டல துணை தாசில்தார் கோமதி, திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்தார்.

போலீசார் அனுமதி இன்றி செங்கல்சூளை நடத்தியதாக மாவடியை சேர்ந்த சங்கரநாராயணன் (வயது 56) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News