உள்ளூர் செய்திகள்

கோவையில் மதுபான கூடத்திற்கு எதிராக பா.ஜ.க.வினர் போராட்டம்

Published On 2023-06-01 09:16 GMT   |   Update On 2023-06-01 09:16 GMT
  • கருமத்தம்பட்டி நகராட்சியில் முறையான அனுமதி பெறவில்லை என கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  • போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சூலூர்,

சூலூர் அருகே கருமத்தம்பட்டியில் தனியார் மதுபான கூடம் செயல்பட்டு வருகிறது.

இந்த மதுபானக்கூடம் அமைக்கப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு கருமத்தம்பட்டி நகராட்சியில் முறையான அனுமதி பெறவில்லை என கூறி கருமத்தம்பட்டி பாஜகவினர், பாஜக மாவட்ட மகளிர் அணி பொருளாளர் கார்த்திக்காயணி தலைமையில் மதுபான கூடம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும் போது, கடந்த 2 வருடங்களாக அனுமதியற்ற கட்டிடத்தில் தனியார் மதுபான கூடம் இயங்கி வருகிறது. 24 மணி நேரமும் இந்த கடை செயல்படுகிறது. எனவே இந்த கடையை உடனே சீல் வைத்து பூட்ட வேண்டும் என தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் சிறிது நேரம் கடையை மூடினர். போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும் நாளை(இன்று) கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு அறிவுறுத்தினர். இதனை அடுத்து சமரசம் அடைந்த போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.இதற்கிைடயே அங்கு வந்த கருமத்தம்பட்டி டி.எஸ்.பி.தையல்நாயகி சம்மந்தப்பட்ட தனியார் மதுபான கூட்டத்தை ஆய்வு செய்தார்.

Tags:    

Similar News