உள்ளூர் செய்திகள்

பொதுமக்களிடம் அமைச்சர் சி.வெ. கணேசன் குறைகளை கேட்டறிந்த காட்சி.

ஐவனூர், எழுத்தூர், மாங்குளம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் சி.வெ. கணேசன் உத்தரவு

Published On 2023-05-07 07:20 GMT   |   Update On 2023-05-07 07:20 GMT
  • ஐவனூர், எழுத்தூர், மாங்குளம் கிராமங்களில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் ஆய்வு செய்தார்.
  • அமைச்சரின் இந்த நடவடிக்கைக்கு கிராம பெண்கள் பாராட்டு தெரிவித்துக் கொண்டனர்.

கடலூர்: 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஐவனூர், எழுத்தூர், மாங்குளம் கிராமங்களில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் ஆய்வு செய்தார். அப்பொழுது கிராம ங்களுக்கு தேவையான வசதிகள் குறித்து வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தார். எழுத்தூர் கிராமத்தில் குடிநீர் வசதி, கழிவுநீர் வடிகால் வசதிகள், சிமெண்ட் சாலை வசதி செய்து தர வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்தனர்.

உடனடியாக அதிகாரிகளை அழைத்து கழிவுநீர் வடிகால் வசதிகளையும் குடிநீர் வசதிகளையும் செய்ய உத்தரவிட்டார். அமைச்சரின் இந்த நடவடிக்கைக்கு கிராம பெண்கள் பாராட்டு தெரிவித்துக் கொண்டனர் .மேலும் ஐயவனூர், மாங்குளம் கிராமத்தில் உள்ள கொவில்களை ஆய்வு செய்து கோவில்களை புனரமைப்பு செய்ய நிதி உதவிஅளித்து உடனடியாக கும்பாபிஷேகம் செய்வ தற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.இதில் கிழக்கு ஒன்றிய செயலாளர் பட்டூர் அமிர்தலிங்கம், மங்களூர் ஒன்றிய சேர்மன் சுகுணா சங்கர் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News