உள்ளூர் செய்திகள்

அதிராம்பட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்.

அதிராம்பட்டினம் அரசு ஆஸ்பத்திரியில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்

Published On 2023-03-25 15:18 IST   |   Update On 2023-03-25 15:18:00 IST
  • ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை செய்ய முடியாத நிலை உள்ளது.
  • இரவு நேரங்களில் நிரந்தர டாக்டர்களும் இல்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

அதிராம்பட்டினம்:

பட்டுக்கோட்டை அடுத்த அதிராம்பட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களான தொக்காளிகடு, மாளிய க்காடு, ஏரிப்புறக்கரை, மகிழங்கோட்டை, ராஜாமடம் ஆகிய பகுதிகளில் ஏராள மான குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இவர்கள் உடல்நிலை சார்ந்த பிரச்சி னைகள் என்றால் அதிராம்பட்டினத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்வது வழக்கம்.

இந்நி லையில், அந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதிகள் இன்றியும், அறுவை சிகிச்சை செய்ய முடியாத நிலையிலும் உள்ளது.

கிழக்கு கடற்கரை சாலையில் விபத்து ஏற்பட்டு இங்கு கொண்டுவர படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய வசதி இல்லாத நிலை உள்ளது.

மேலும், இரவு நேரங்களில் நிரந்தர டாக்டர்களும் இல்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

எனவே, சம்பந்த ப்பட்ட அதிகாரிகள் அதிரா ம்பட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிராம்பட்டினம் நகர காங்கிரஸ் கட்சி தலைவர் தமீம் அன்சாரி கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

Similar News