உள்ளூர் செய்திகள்

அய்யாவழி மாநாட்டில் நாராயணசாமி வாகன பவனி நடைபெற்ற காட்சி.

களக்காட்டில் அய்யா வழி 8-வது மாநாடு- நாராயணசாமி வாகன பவனி

Published On 2023-08-28 14:41 IST   |   Update On 2023-08-28 14:41:00 IST
  • மாலையில் அய்யா நாராயணசுவாமியின் வாகன பவனி இடம்பெற்றது
  • ஸ்ரீகுரு சிவசந்திரர் வாகன பவனியை தொடங்கி வைத்தார்.

களக்காடு:

களக்காட்டில் வட்டார அய்யாவழி மக்கள் மாநாட்டுக்குழு சார்பில் அய்யா வழி 8-வது மாநாடு நடந்தது. இதையொட்டி மதியம் 12 மணிக்கு உச்சிப்படிப்பும், அதனைதொடர்ந்து அன்ன தானமும் வழங்கப்பட்டது.

திருஏடு வாசிப்பு

தொடர்ந்து திருஏடு வாசித்து விளக்கம் கொடுக்கப்பட்டது. அதன் பின் மாலையில் அய்யா நாராயணசுவாமியின் வாகன பவனி இடம்பெற்றது. சிறப்பு பணிவிடைகளுக்கு பின் அய்யா நாராயணசுவாமி வாகனத்திற்கு எழுந்தருளினார். ஸ்ரீகுரு சிவசந்திரர் வாகன பவனியை தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க அய்யா நாராயண சுவாமி களக்காடு ரதவீதிகளில் உலா வந்தார். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் மாநாடு நடைபெற்றது. முன்னள் எம்.பி. ஜெயத்துரை தலைமை தாங்கினார். வள்ளியூர் அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் தர்மர், முன்னாள் காங்கிரஸ் மாவட்ட தலைவர் தமிழ்செல்வன், அரிசிவராமன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். பணகுடி சுரேஷ் நாரணமே வைகுண்டம் என்ற தலைப்பிலும், சிறயன்விளை சாந்தகுமாரி, அகிலத் திரட்டில் வாழ்வியல் கருத்து என்ற தலைப்பிலும் பேசினர்.

அருள் இசை வழிபாடு

தொடர்ந்து ஸ்ரீகுருசிவசந்திரரின் அருள் இசை வழிபாடும் நடந்தது. ஏற்பாடுகளை அய்யாவழி மாநாட்டு குழு தலைவர் சங்கரன், துணை தலைவர் ராமலிங்கம், ஒருங்கிணைப்பா ளர் பால்சாமி, செயலாளர் சுப்பிரமணியன், பொருளாளர் சண்முகநாதன், இணை செயலாளர்கள் முத்துப்பாண்டி, சொர்ணலிங்கம், முத்துராஜ், கார்த்திக் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News