உள்ளூர் செய்திகள்

விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

ரெட்டியார்சத்திரத்தில் வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு

Published On 2022-09-22 10:38 IST   |   Update On 2022-09-22 10:38:00 IST
  • ரெட்டியார் சத்திர வட்டாரத்தில் சுமார் 6000 ஹெக்டேர் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டு வருகிறது.
  • மக்காச்சோள படைப்புழுவின் தாக்கம் தென்படுகிறது.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார் சத்திர வட்டாரத்தில் சுமார் 6000 ஹெக்டேர் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டு வருகிறது.

இதில் முக்கியமாக ஸ்ரீராமபுரம், நீல மலைக்கோட்டை, கசவனம்பட்டி, சிந்தலகுண்டு, தருமத்துப்பட்டி சிரங்காடு ஆகிய கிராமங்களில் அதிக அளவு மக்காச்சோள பயிர் விதைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

மக்காச்சோள படைப்புழுவின் தாக்கம் தென்படுகிறது. இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள, ஊடுபயிர் பயிர் செய்யாதவர்கள் வரப்பு பயிராக சூரியகாந்தி மற்றும் பயறு வகை பயிர்கள் பயிர் செய்திடவும், இனக் கவர்ச்சி பொறி ஏக்கருக்கு 6 என்ற எண்ணிக்கையில் விளக்குப்பொறி வைத்திடவும், விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என வேளாண்மை உதவி இயக்குநர் சந்திரமோகன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News