உள்ளூர் செய்திகள்

இயற்கை உரம் தயாரிக்க விவசாயிகளுக்கு விழிப்புணர்வு

Published On 2023-01-12 13:56 IST   |   Update On 2023-01-12 13:56:00 IST
  • பரமத்தி அருகே உள்ள பிள்ளைகளத்தூரில் இயற்கை உரம் தயாரிப்பது குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கமளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
  • சமீப காலமாக இயற்கை விவசாயம் குறித்த ஈடுபாடு விவசாயிகளிடையே அதிகரித்துள்ளது.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி அருகே உள்ள பிள்ளைகளத்தூரில் இயற்கை உரம் தயாரிப்பது குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கமளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

சமீப காலமாக இயற்கை விவசாயம் குறித்த ஈடுபாடு விவசாயிகளிடையே அதிகரித்துள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக செயற்கை உரங்களை கைவிட்டு தமக்கு தேவையான உரங்களை தாமே இயற்கை முறையில் தயாரித்து கொள்கின்றனர். ஆனால் பல விவசாயிகள் இதுகுறித்த விழிப்புணர்வு இல்லாமல் அதிக செயற்கை உரங்களை நிலத்தில் இட்டு மண்வளத்தை குறைத்து விளைச்சலை எதிர்பார்த்து ஏமாற்றம் அடைகின்றனர்.

இந்த நிலை மாற பி.ஜி.பி வேளாண் கல்லூரி

மாணவர்கள் விவசாயி களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வீட்டுக் கழிவு களை வைத்து இயற்கை உரம் தயாரிக்கும் முறை குறித்து செயல் விளக்கம் காண்பித்தனர்.

ஆர்கானிக் கம்போஸ்ட் எனப்படும் கரிம உரம் மற்றும் அதை தயாரிக்கும் முறை குறித்து விவசாயிகளுக்கு எடுத்து கூறினர். மேலும் இதன் பயன்பாடுகள் மற்றும் முக்கியத்துவம் குறித்தும், இயற்கை உரம் தொடர்பாக விவசாயிகளுக்கு மாண வர்கள் செயல் விளக்க மளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

Tags:    

Similar News