உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

பள்ளியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு கூட்டம்

Published On 2022-10-29 14:56 IST   |   Update On 2022-10-29 14:56:00 IST
  • கல்லூரி மாணவர்கள் ஏற்படுத்திய இந்த விழிப்புணர்வு மாணவர்களை வெகுவாக கவர்ந்தது.
  • சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

தஞ்சாவூர்:

தஞ்சை வடக்குவாசல் புனித ஜான் டி பிரிட்டோ அரசு உதவி பெறும் பள்ளியில் வல்லம் அடைக்கலமாதா கல்லூரி சமூகப்பணித்துறை மாணவ-மாணவிகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு கூட்டத்தை நடத்தினர்.

பள்ளி தலைமை ஆசிரியை சகோ.பவுலின் தெரசாள் தலைமை வகித்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு கூட்டத்தை தொடங்கி வைத்தார்.

சிறப்பு விருந்தினர்களாக நகராட்சி ஊழியர் ஞானசேகரன், ஆசிரியை எஸ்தர் கலந்து கொண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை மாணவர்களிடையே எடுத்துரைத்தனர்.

சமூகப்பணித்துறை பேராசிரியர் வனிதா பேசுகையில், கல்லூரி மாணவர்கள் ஏற்படுத்திய இந்த விழிப்புணர்வு மாணவர்களை வெகுவாக கவர்ந்தது என பாராட்டி பேசினார்.

சமூகப்பணித்துறை தலைவர் முத்துக்குமார் வழிகாட்டுதல்படி நடந்த இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

முன்னதாக பள்ளி ஆசிரியை ரோஸ்லின் வாழ்த்துரை வழங்கினார். கூட்டத்தை ஒருங்கிணைத்த கல்லூரி சமூகப்பணித்துறை மாணவ-மாணவிகளான ஜோ, புவனா, தேவி, அலெக்ஸ், அசோக், வனஜா ஆகியோரை பள்ளி தலைமை ஆசிரியை பவுலின் தெரசாள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பாராட்டி வாழ்த்தினர்.

இந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வை அரசு உதவி பெறும் பள்ளியான வடக்குவாசல் புனித ஜான் டி பிரிட்டோ பள்ளியில் ஏற்படுத்தியதன் மூலம் வல்லம் அடைக்கலமாதா கல்லூரி சமூகப்பணித்துறை மாணவர்கள் தங்கள் கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

Tags:    

Similar News