கோத்தகிரியில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு
- சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
- பொதுமக்களுக்கும் துண்டு பிரசுரங்கள் மூலம் போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வவை வழங்கினார்.
கோத்தகிரி,
கோத்தகிரியில் போக்குவரத்து போலீசார் சார்பில் பொதுமக்களுக்கு போக்குவரத்து விதிமீறலைகளை கடைபிடிப்பது மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
கோத்தகிரி காமராஜர் சதுக்கம் பகுதியில் இருந்து பஸ்நிலையம் வரையில் போக்குவரத்து போலீசார் மற்றும் பள்ளி மாணவர்கள் இணைந்து ஊர்வலமாக சென்று போக்குவரத்து விதிகளை கடைபிடித்து வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் துண்டு பிரசுரங்கள் மூலம் போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வவை வழங்கினார். முடிவில் கோத்தகிரி பஸ்நிலையம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வரும் அனைவரும் தலை கவசம் அணியவேண்டும் என்றும் தலை கவசம் அணிவதன் அவசியம் குறித்தும் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் ஜான் கூறினார். மேலும் பொதுமக்களுக்கு இலவச தலைக்கவசமும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் சேகர், போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.