உள்ளூர் செய்திகள்

நாங்குநேரியில் தொழிலாளியை கத்தியால் குத்த முயற்சி - வாலிபர் கைது

Published On 2023-04-11 14:30 IST   |   Update On 2023-04-11 14:30:00 IST
  • நேற்று கார்த்திக் நாங்குநேரி பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார்.
  • அப்போது அங்கு வந்த சிவசுப்பு கார்த்திக்கிடம் தகராறில் ஈடுபட்டார்.

களக்காடு:

நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சி புது அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துராமலிங்கம் மகன் கார்த்திக் (வயது 31). இவர் நாங்குநேரியில் கார் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு பஞ்சர் ஒட்டும் கடை வைத்துள்ளார். மறுகால்குறிச்சி பள்ளிக்கூடத் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் சிவா என்ற சிவசுப்பு (23). இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு கஞ்சா விற்றதாக போலீசார் கைது செய்தனர்.

கஞ்சா விற்பனை குறித்து கார்த்திக் தான் போலீசுக்கு தகவல் கொடுத்ததாக சிவசுப்பு கருதினார். நேற்று கார்த்திக் நாங்குநேரி பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிவசுப்பு நீ தானே நான் கஞ்சா விற்றது குறித்து போலீசுக்கு தகவல் சொன்னது என்று கேட்டு தகராறில் ஈடுபட்டார்.

மேலும் அவர் கத்தியால் கார்த்திக்கை குத்த முயற்சி செய்தார். கார்த்திக் விலகி ஓடி உயிர் தப்பினார். இதுபற்றி நாங்குநேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. நாங்குநேரி டி.எஸ்.பி. ராஜு, இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சிவசுப்புவை கைது செய்தனர்.

Tags:    

Similar News