உள்ளூர் செய்திகள்

கேரள மாணவர் மீது தாக்குதல்

Published On 2022-12-02 14:45 IST   |   Update On 2022-12-02 14:45:00 IST
  • டோனி தாஸ் சுந்தராபுரம் அருகே தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார்.
  • இவர் தனது நண்பர்களுடன் ஜவுளி எடுப்பதற்கு பஸ்ஸில் பயணம் செய்தனர்.

குனியமுத்தூர்,

கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர் டோனி தாஸ் (22). இவர் சுந்தராபுரம் அருகே தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். இவருடைய நண்பர்கள் ஒத்தக்கால் மண்டபத்தை சேர்ந்த ஆகாஷ் (23)சதீஷ் (21).

நேற்று 3 பேரும் ஜவுளி எடுப்பதற்கு பஸ்ஸில் பயணம் செய்தனர். துணி எடுத்துவிட்டு சுந்தராபுரம் நோக்கி பஸ்ஸில் வந்தனர்.

அப்போது பஸ்சில் வந்து கொண்டிருக்கும் போது, கேரளாவில் தான் நல்ல கலெக்ஷன்ஸ் உள்ளது. கோவையில் எதுவுமே சரியாக இல்லை என்று டோனிதாஸ் தெரிவித்தார். அதற்கு ஆகாஷ், சதீஷ் இருவரும் சேர்ந்து கோவையில் தான் நல்ல கலெக்ஷன்ஸ் உள்ளது என்றனர். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆகாஷ், சதீஷ் இருவரும் சேர்ந்து டோனிதாமசை தாக்கினர்.

இதில் கை,கால், முகத்தில் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து அவர் போத்தனூர் போலீசில் புகார் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசர் வழக்குப்பதிவு செய்து ஆகாஷ், சதீஷ் 2 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

Similar News