உள்ளூர் செய்திகள்

யோகா பயிற்சி முகாமில் மருத்துவர் பிரேமா கலந்து கொண்டு பஞ்சாயத்து தலைவர் மற்றும் கவுன்சிலர்களுக்கு பயிற்சி அளித்தார்.

கட்டிகானப்பள்ளியில் யோகா பயிற்சி முகாம்

Published On 2022-07-21 14:46 IST   |   Update On 2022-07-21 14:46:00 IST
  • தற்போது கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதையடுத்து பொதுமக்களிடையே யோகா பயிற்சியின் அவசியம் குறித்து விளக்கினார்.
  • இதில், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அடுத்த கட்டிக்கானப்பள்ளி சிறுவர் பூங்காவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ஹோமியோபதி ஆணையரகம் மூலம் நகர்ப்புற மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் இணைந்து யோகா பயிற்சி முகாமை நடத்தி வருகிறது.

அதன்படி கிருஷ்ணகிரி அடுத்த கட்டிகானப்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளி அருகில் உள்ள சிறுவர் பூங்காவில், மேகலசின்னம்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்.பிரேமா தலைமையில், மருத்துவ பணியாளர்கள், யோகா பயிற்றுனர் அடங்கிய குழுவினர் யோகா பயிற்சி முகாமை தொடங்கி வைத்தனர்.

கட்டிகானப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் காயத்ரி கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார். இதில், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இது குறித்து டாக்டர்.பிரேமா கூறுகையில், தற்போது கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதையடுத்து பொதுமக்களிடையே யோகா பயிற்சியின் அவசியத்தையும், பலன்களையும் எடுத்து கூறி முகாம்களை நடத்தி வருகிறோம்.

இனி வாரம்தோறும் புதன் கிழமையன்று கட்டிகானப்பள்ளி சிறுவர் பூங்காவில் யோகா பயிற்சி முகாம் தொடர்ந்து நடைபெறும். இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

Tags:    

Similar News