அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த காட்சி.
அரசமரத்து மகாமாரியம்மன் கோவில் திருவிழா
- நாகக்கன்னி, ஆகிய பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேக ஆராதனைகளும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.
- பாரத கோவிலில் இருந்து மங்கள வாத்தியம் பம்பை இசை முழங்க பக்தர்கள் பால்குட ஊர்வலம் நடைபெற்றது.
பர்கூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் கணேஷ் நகர் ஸ்ரீ அரசமரத்து மகாமாரியம்மன் கோவில் 20- ஆம் ஆண்டு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
கடந்த 9-தேதி கணபதி யாகத்துடன் விழா தொடங்கியது. அம்மனுக்கு விரத காப்பு கட்டுதல், பால்குடம் எடுக்கும் சுமங்கலி பெண்களுக்கு விரத காப்பு கட்டுதல், அம்மனுக்கு கூழ் ஊற்றுதல், ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. ஆலயத்தில் உள்ள முத்தாரம்மன், பிரித்தியங்கரா தேவி, ஸ்ரீ வராகி அம்மன், நாகராஜன், நாகக்கன்னி, ஆகிய பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேக ஆராதனைகளும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.
பாரத கோயிலில் இருந்து மங்கள வாத்தியம் பம்பை இசை முழங்க பக்தர்கள் பால்குட ஊர்வலம் நடைபெற்றது. மேலும் அம்மனுக்கு பால் அபிஷேகம், செய்து சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டத. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
பர்கூர் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதனையடுத்து பக்தர்களுக்கு அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது.