உள்ளூர் செய்திகள்

மாவட்ட இளைஞர் நீதி குழுமத்தில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

Update: 2022-06-25 11:31 GMT
  • விண்ணப்பிக்க விரும்புபவர்கள் குறைந்தபட்ச கல்வித்தகுதியாக 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
  • தட்டச்சு கணினி தொழிநுட்ப சான்றிதழ் மற்றும் கணினி இயக்குவதில் முன் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.

காஞ்சிபுரம்:

தமிழ்நாடு அரசு சமூக பாதுகாப்பு துறையின்கீழ் இயங்கும் காஞ்சிபுரம் மாவட்ட இளைஞர் நீதி குழுமத்தில் காலியாக உள்ள உதவியாளருடன் கலந்த கணினி இயக்குபவர் (Asst. cum Data Enty Operator) பணியிடத்தை முற்றிலும் தற்காலிகமாக ஓராண்டு கால ஒப்பந்தத்தின்பேரில் மாதம் 9000 ரூபாய் தொகுப்பூதிய அடிப்படையில் பூர்த்தி செய்யப்பட உள்ளது.

இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் குறைந்தபட்ச கல்வித்தகுதியாக 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். மேலும் தட்டச்சு கணினி தொழிநுட்ப சான்றிதழ் மற்றும் கணினி இயக்குவதில் முன் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.

மேற்கண்ட தகுதிகளைப் பெற்று விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் காஞ்சிபுரம் மாவட்ட இணையதள முகவரியில் (https://kancheepuram.nic.in/) பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், அதில் குறிப்பிட்டுள்ள விவரங்கள் சம்பந்தமான அனைத்து சான்றிதழ்களின் நகல்களை இணைத்து ஜூலை 15ம் தேதி மாலை 5.30 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ, "மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, எண்.317, காமாட்சி நிலையம், கே.டி.எஸ்.மணி தெரு, மாமல்லன் நகர், காஞ்சிபுரம்-631502" என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News