உள்ளூர் செய்திகள்

திருநங்கை ரக்க்ஷிதா. 

அண்ணாமலை பல்கலையில் முனைவர் பட்டம் பயில திருநங்கைக்கு அனுமதி

Published On 2023-04-14 08:19 GMT   |   Update On 2023-04-14 08:19 GMT
  • ரக்ஷிதா என்கிற சரத்குமார். திருநங்கையான இவர் அண்ணாமலை பல்கலைகழத்தில் முனைவர் பட்டம் பயில் விண்ணப்பித்திருந்தார்
  • திருநங்கை ரக்க்ஷிதா தனது முனைவர் பட்ட படிப்பை வியாழக்கிழமையன்று தொடங்கினார்.

கடலூர்:

கடலூர் வட்டம், கோண்டூர் தாலுகா, மாரியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் நாகப்பன் மகனான ரக்ஷிதா என்கிற சரத்குமார். திருநங்கையான இவர் அண்ணாமலை பல்கலைகழத்தில் முனைவர் பட்டம் பயில் விண்ணப்பித்திருந்தார்.

திருநங்கை என்ற ஒரே காரணத்தால் இடம் மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநிலகுழு உறுப்பினர் ரமேஷ்பாபு, முத்துக்குமரன் ஆகியோர் திருநங்கை ரக்ஷிதாவை அழைத்துக்கொண்டு பலகலைக் கழக துணை வேந்தரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். மனுவில், இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகளான, நீதியரசர்கள் ராதாகிருஷ்ணன், ஏ.கே.சிக்ரி ஆகியோர் கடந்த 2014-ம் ஆண்டு திருநங்கை சமூகம் குறித்த வழக்கில் கொடுத்த தீர்ப்பின் படி முனைவர் பயில அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

இதனை தொடர்ந்து பல்கலைக் கழக நிர்வாகம் திருநங்கை ரக்ஷிதாவுக்கு வேதியல்துறையில் முனைவர் பட்டம் பயில்வதற்கு அனுமதி அளித்துள்ளது.  இதனையடுத்து திருநங்கை ரக்க்ஷிதா தனது முனைவர் பட்ட படிப்பை வியாழக்கிழமையன்று தொடங்கினார். அவரது படிப்பிற்கு உதவி புரிந்த துறை தலைவர் ஜெயபாரதி, மார்க்சிஸ்ட் கட்சி மாநிலகுழு உறுப்பினர் ரமேஷ்பாபு, நகர செயலாளர் ராஜா ஆகியோருக்கு திருநங்கை ரக்க்ஷிதா கண்கலங்க நன்றி தெரிவித்தார். இந்த சம்பவம் பல்கலைக் கழக வளாகத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News