உள்ளூர் செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற முதியவர் கைது

Published On 2023-06-04 15:21 IST   |   Update On 2023-06-04 15:21:00 IST
  • 11 வயது பள்ளி மாணவி குளிர்பானம் வாங்க கடைக்கு வந்துள்ளார்.
  • வீட்டிற்கு சென்று பெற்றோர்களிடம் சம்பவத்தை தெரிவித்துள்ளார்.

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகில் உள்ள மாப்பிள்ளைகுப்பத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 75). இவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவர் அதே பகுதியில் பள்ளிக்கூடத்திற்கு எதிரே ஒரு பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.

சில தினங்களுக்கு முன்பு இவரது கடைக்கு அதே ஊரைச் சேர்ந்த 11 வயது பள்ளி மாணவி குளிர்பானம் வாங்க வந்துள்ளார்.

குளிர்பானம் வாங்க வந்தபோது கடையில் பொதுமக்கள் யாரும் இல்லாததால், துணிச்சல் அடைந்த கார்த்திகேயன் சிறுமியை கடைக்கு உள்ளே அழைத்துச் சென்று அவளுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதாக தெரிகிறது.

இதில் அதிர்ச்சி அடைந்த அச்சிறுமி அங்கிருந்து தப்பித்து ஓடி தனது வீட்டிற்கு சென்று பெற்றோர்களிடம் சம்பவத்தை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சிறுமியின் தாய் நன்னிலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தலைமை ஆசிரியர் கார்த்திகேயனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது.

Tags:    

Similar News