உள்ளூர் செய்திகள்

கோத்தகிரி தாசில்தார் அலுவலகம் முன்பு தரையில் படுத்து முதியவர் நூதன போராட்டம்

Published On 2023-09-03 10:11 GMT   |   Update On 2023-09-03 10:11 GMT
  • சொத்துக்களை சகோதரர் அபகரித்து கொண்டதாக கூறி ரோட்டில் இருந்து எழ மறுத்தார்
  • மொட்டை மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வதாகவும் மிரட்டல்

அரவேணு,

நீலகிரி மாவட்டம் கோத்த கிரி பகுதியில் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், தினசரி மார்க்கெட், அரசு பள்ளிகள் மற்றும் எல்.ஐ.சி அலுவலகம் மற்றும் யூனியன் அலுவலகம் ஆகியவை உள்ளன. இந்த நிலையில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஒரு முதியவர் தாசில்தார் அலுவலகம் முன்பாக வந்திருந்தார்.

அப்போது அவர் திடீ ரென நடுரோட்டில் படுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் முதியவரிடம் விசாரித்தனர்.

அப்போது எனக்கு சொந்தமான சொத்துக்களை என் சகோ தரர் அபகரித்து கொண்டார். எனவே அவர் மீது போலீ சார் உடனடியாக நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி ரோட்டில் இருந்து எழ மறுத்தார்.

கோத்தகிரி ரோட்டில் முதியவர் படுத்த கிடந்ததால் அந்த வழியாக வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வாக னங்கள் செல்ல முடிய வில்லை. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. வேடிக்கை பார்ப்பதற்காக பொது மக்களும் குவிந்ததால், கோத்தகிரி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட் டது.

இதற்கிடையே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக் டர் ரகுமான்கான், எதுவாக இருப்பினும் பேசி தீர்த்து கொள்ளலாம். எழுந்து வாருங்கள் என்று கூறினார். அதற்கு அவர், என் தாத்தாவிற்கு சொந்தமான 30 ஏக்கர் நிலத்தை எனது சகோதரன் ஏமாற்றி எடுத்துக் கொண்டார். அதை மீட்டு தரவேண்டும். இல்லையெனில் தரையில் முட்டி மோதிக் கொண்டு காயப்படுத்தி கொள்வேன். அல்லது வருவாய் வட் டாட்சியர் அலுவலகத்தின் மொட்டை மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள் வேன் என்று மிரட்டினார். கலெக்டர் நேரடியாக வரவேண்டும் எனவும் கூறி, தலையை நிலத்தில் மோதிக் கொண்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நீடித்தது. உடனே போலீசார் அவரை மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

போலீசாரின் விசார ணையில் அவர் கடை க்கம்பட்டி கிரா மத்தைச் சேர்ந்தவர் என்ப தும், குடிபோதையில் நிலத் தில் படுத்து போராட்டம் நடத்தியதும், சொத்து அபகரிப்பு தொடர்பாக எந்த அதிகாரிகளிடமும் மனு அளிக்கவில்லை, நீதி மன்றத்தில் வழக்கும் போடவில்லை என்பதும் தெரியவந்தது. எனவே முதியவருக்கு போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News