உள்ளூர் செய்திகள்

விபத்தில் காயம் அடைந்த மாணவர்கள்-ஆசிரியர்களை சபாநாயகர் அப்பாவு நேரில் சென்று நலம் விசாரித்த காட்சி.

நெல்லையில் விபத்தில் சிக்கிய வாகனத்தின் பராமரிப்பு குறித்து விசாரணை நடத்தப்படும் - காயமடைந்தவர்களை பார்த்த பின்னர் சபாநாயகர் தகவல்

Published On 2023-08-26 14:30 IST   |   Update On 2023-08-26 14:30:00 IST
  • மாவட்ட தொழில் மையம் அருகே வேன் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே கவிழ்ந்தது.
  • படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனை குழந்தைகள் வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை நடந்து வருகிறது.

நெல்லை:

நெல்லை மாவட்டம் வள்ளியூர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிட பள்ளி மாணவர்கள் 28 பேர், ஆசிரியர்கள் 5 பேர் மற்றும் ஒரு உதவியாளர், ஒரு ஓட்டுனர் என 35 பேர் ஒரு வேனில் பாளையில் உள்ள அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் ஜிம்னாஸ்டிக் போட்டி பயிற்சிக்காக நேற்று வந்தனர்.

பாளையில் மாவட்ட தொழில் மையம் அருகே வேன் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே கவிழ்ந்த விபத்தில் 15-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் படுகாயம் அடைந்தனர்.

நெல்லை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் லேசான காயமடைந்தவர்கள் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனை குழந்தைகள் வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை நடந்து வருகிறது.

இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களை இன்று காலை சபாநாயகர் அப்பாவு நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

தொடர்ந்து நிருபர்களிடம் அவர் கூறுகையில், பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்லும் வாகனம் பழுது ஏற்பட்டு இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த வாகனம் முறையாக பராமரிக்கப்பட்டுள்ளதா? என்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்ப டும் என தெரிவித்தார்.

அப்போது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் ரேவதி பாலன், தி.மு.க பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், சித்திக், ஒன்றிய செயலாளர்கள் கே.எஸ். தங்கபாண்டியன், பி.சி. ராஜன், ஜோசப் பெல்சி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News