உள்ளூர் செய்திகள்

தொண்டாமுத்தூர் அருகே குட்டியுடன் புகுந்த யானை 2 வீடுகளை சேதப்படுத்தியது

Published On 2023-09-05 14:37 IST   |   Update On 2023-09-05 14:37:00 IST
  • தொண்டாமுத்தூர் ரவி பழங்குடி கிராமத்துக்கு நேரில் சென்று ஆறுதல்
  • சேதம் அடைந்த வீட்டிற்கு பழுது பார்க்கவும், மின்விளக்கு அமைக்கவும் நடவடிக்கை

 வடவள்ளி,

கோவை தொண்டா முத்தூர் அருகே குப்பேபாளையம் கிராமம் உள்ளது. மலை அடிவாரப்பகுதியில் இந்த கிராமம் உள்ளதால் அவ்வப்போது வனவிலங்குகள் ஊருக்குள் நுழைவது வழக்கம்.

இந்த நிலையில் இன்று அதிகாலை யானை ஒன்று தனது குட்டியுடன் வனப்பகுதியில் இருந்து வெளியே குப்பேபாளையத்தில் பழங்குடியினர் வசிக்கும் பகுதிக்கு வந்தது.

அதிகாலை 3 மணியளவில் வந்த யானையை கண்டு நாய்கள் அதிக அளவில் சத்தம் போட்டது. சுதாரித்துக் கொண்டு மக்கள், யானை வீட்டின் ஓடுகளை உடைப்பது கண்டு வெளியே ஓடினர். வெள்ளிங்கிரி (43) மற்றும் நஞ்சன் (60) ஆகிய இருவரது வீடுகளை யானை சேதப்படுத்தியது.

வீட்டின் உள்ளே இருந்த கோதுமை, அரிசி போன்றவற்றை தின்றது. சுமார் 1 மணி நேரம் அங்கே குட்டியுடன் யானை நின் றது. வனத்துறைக்கு தகவல் கொடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் யானையை வனத்திற்குள் விரட்டினர்.

சுமார் 10 குடும்பங்கள் வசிக்கும் இந்த பகுதியில் கடந்த 2 வருடங்களாக மின் விளக்குகள் எரிவதில்லை. இரவு நேரங்களில் வனவி லங்குகள் நடமாட்டத்தால் வெளியில் வர முடியாமல் குழந்தைகளுடன் அவதிப்படுவதாக பழங்குடியினர் வேதனை தெரிவித்து உள்ளனர். அதிகாரிகள் மின் விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, பழங்குடி மக்களுக்கு ஆறுதல் கூறி சேதம் அடைந்த வீட்டிற்கு பழுது பார்க்க நிதி உதவி கொடுத்து உடனடியாக மின் விளக்குகள் எரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.  

Tags:    

Similar News