உள்ளூர் செய்திகள்

ஆசிட் டேங்கர் லாரி மோதி விபத்தில் படுகாயமடைந்த சுற்றுலா பயணிகளை தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் போலீசார் மீட்ட போது எடுத்தபடம்.

திட்டக்குடி அருகே சுற்றுலா பஸ் மீது ஆசிட் லாரி மோதி விபத்துஆந்திராவை சேர்ந்த வாலிபர் பலி

Published On 2023-07-17 07:34 GMT   |   Update On 2023-07-17 07:34 GMT
  • 45 பேருடன் சொகுசு பஸ் வந்து கொண்டிருந்தது.
  • லாரி திடீரென முன்னாள் சென்ற சுற்றுலா பஸ்சின் பின்பக்கம் மோதியது.

கடலூர்:

ஆந்திராவில் இருந்து திருச்சி ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் வரை ஆன்மிக சுற்றுலா செல்ல 45 பேருடன் சொகுசு பஸ் வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்சினை ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அடுத்த நரசிங்கப்பள்ளியை சேர்ந்த கணேஷ் (வயது 25) என்பவர் ஓட்டிவந்தார்.இந்த பஸ் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆவட்டி கூட்ரோடு அருகே இன்று அதிகாலை வந்தது. அப்போது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி ஆசிட் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி பஸ்சின் பின்னால் வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை சிவகங்கை மாவட்டம் கடமை நேந்தலை சேர்ந்த ஆரோக்கியசாமி (56) என்பவர் ஓட்டிச் சென்றார்.

இந்த லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, முன்னாள் சென்ற சுற்றுலா பஸ்சின் பின்பக்கம் மோதியது. இதில் பஸ்சில் பயணம் செய்த அணில் (18) என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இது குறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ராமநத்தம் போலீசார் விபத்தில் சிக்கியர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது டேங்கர் லாரியில் இருந்து ஆசிட் வெளியேறியதால் அந்த பகுதியில் கண் எரிச்சலும், மூச்சு திணறல் ஏற்பட்டது. அப்பகுதியே புகை மண்ட லமாக மாறியது. இதனால் மீட்பு பணியில் காலதாமதம் ஏற்பட்டது.

உடனடியாக தீயணைப்பு துறையினர் வர வழைக்கப்பட்டனர். அவர்க ளுடன் சேர்ந்து போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். படுகாயமடைந்த சுற்றுலா பயணிகளை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அங்கு தீயணைப்பு படையினர் தண்ணீரை பிய்ச்சி அடித்தனர். சாலையில் இருந்த ஆசிட் சாலையோரம் ஓடியது. விபத்தில் இறந்த வாலிபரின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து ராமநத்தம் (பொறுப்பு) இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News