உள்ளூர் செய்திகள்

கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையத்தில் தினசரி சந்தை வியாபாரிகளுக்கு குலுக்கல் முறையில் கடைகள் ஒதுக்கீடு - நகராட்சி கமிஷனர் அறிவிப்பு

Published On 2023-02-07 14:30 IST   |   Update On 2023-02-07 14:30:00 IST
  • நகராட்சி அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. மகாலட்சுமி, டி.எஸ்.பி. வெங்கடேஷ், நகராட்சி தலைவர் கருணாநிதி மற்றும் நகராட்சி ஆணையர் (நான்) ஆகியோர் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் நடை பெற்றது.
  • கூடுதல் பஸ் நிலையத்தில் குலுக்கல் முறையில் கடைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவில்பட்டி:

கோவில்பட்டி நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) பார்த்தசாரதி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-

கோவில்பட்டி நக ராட்சி பசும்பொன் முத்து ராமலிங்கத் தேவர் தினசரி சந்தை புதுப்பிக்கப் பட உள்ளதையொட்டி, கூடுதல் பஸ் நிலையத்தில் நகராட்சி தினசரி சந்தை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து நகராட்சி அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. மகாலட்சுமி, டி.எஸ்.பி. வெங்கடேஷ், நகராட்சி தலைவர் கருணாநிதி மற்றும் நகராட்சி ஆணையர் (நான்) ஆகியோர் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் நடை பெற்றது.

கூட்டத்தில், கூடுதல் பஸ் நிலையத்தில் பசும்பொன் முத்துராம லிங்கத் தேவர் தினசரி சந்தை வியாபாரிகளுக்கு கடைகளை குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்படும் என முடிவெடுக்கப்பட்டது.

எனவே கூடுதல் பஸ் நிலையத்தில் கடைகளை ஒதுக்கீடு செய்யும் வகையில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தினசரி சந்தை குத்தகை தாரர்கள், வணிகர் சங்க பிரதிநிதிகள் ஆகியோருடன் நகராட்சி அலுவலகத்தில் இன்று (7-ந் தேதி ) மாலை 4 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்ட பின் கூடுதல் பஸ் நிலையத்தில் குலுக்கல் முறையில் கடைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, குத்தகை தாரர்கள், வணிகர் சங்க பிரதிநிதிகள் அனைவரும் இதில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News