உள்ளூர் செய்திகள்

நெருப்பு வளையத்தில் சாகசம்- ஓரசோலை மாணவிக்கு பரிசு

Published On 2023-07-18 14:04 IST   |   Update On 2023-07-18 14:04:00 IST
  • கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற ஜூட்ஸ் பள்ளிக்கு பரிசு வழங்கப்பட்டன
  • 4-ம்வகுப்பு மாணவி யாக்காவுக்கு நிர்வாகிகள் பரிசு வழங்கி கவுரவித்தனர்.

அரவேணு,

கோத்தகிரி ரோட்டரி சங்கத்தின் 2023-24ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. முன்னாள் தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். செயலாளர் பரமேஸ்வரன் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் புதிய தலைவராக ராஜ்குமார், செயலாளர் நஞ்சன் , பொருளாளர் கமலசீரலன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இதனை தொடர்ந்து மாநில அளவிலான கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற ஜூட்ஸ் பள்ளிக்கு பரிசு வழங்கப்பட்டன நெருப்பு வளையத்தை வேகமாக சுற்றி சாதனை படைத்த ஒரசோலை பகுதியை சேர்ந்த 4-ம்வகுப்பு மாணவி யாக்காவுக்கு நிர்வாகிகள் பரிசு வழங்கி கவுரவித்தனர்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் குண்டன், சாந்தி ராமு, ரோட்டரி ஆளுநர் சுரேஷ் பாபு மண்டல ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன், துணை ஆளுநர் முரளிதரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சக்தி நல்லசிவம், முன்னாள் தலைவர்கள் தேவராஜ், ரவிக்குமார், முன்னாள் திமுக ஒன்றிய செயலாளர் வீரபத்திரன், ஒன்றிய செயலாளர் நெல்லை கண்ணன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News