உள்ளூர் செய்திகள்

மாவட்ட செயலாளர் சண்முகநாதனுக்கு ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் தட்டார்மடம் ஞானபிரகாசம் பொன்னாடை அணிவித்த காட்சி.


ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்காக உழைக்கும் இயக்கம் அ.தி.மு.க. - முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் பேச்சு

Published On 2023-01-22 12:32 IST   |   Update On 2023-01-22 12:32:00 IST
  • பேய்க்குளத்தில் அ.தி.மு.க.சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் ஆழ்வார் திருநகரி மேற்கு ஒன்றிய செயலாளர் செம்பூர் ராஜ் நாராயணன் தலைமையில் நடைபெற்றது.
  • தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சியில் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக தந்தார்

சாத்தான்குளம்:

ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பேய்க்குளத்தில் அ.தி.மு.க.சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் ஆழ்வார் திருநகரி மேற்கு ஒன்றிய செயலாளர் செம்பூர் ராஜ் நாராயணன் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் தட்டார்மடம் ஞானப்பிரகாசம், மேற்கு ஒன்றிய செயலாளர்கள் காசிராஜன், சவுந்தரபாண்டி, ஆழ்வார் திருநகரி பேரூராட்சி செயலாளர் செந்தில்குமார், நகர செயலாளர் குமரகுருபரன், மேற்கு ஒன்றிய இளைஞர் அணி தலைவர் அம்பரூஸ் கிப்டன் ஆகியோர் முன்னி லை வகித்தனர். முன்னாள் சேர்மன் விஜயகுமார் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சண்முகநாதன் கலந்து கொண்டு பேசியதாவது:-

தமிழகத்தில் ஜெயலலிதாவுக்கு பிறகு அவர் வழியில் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சி நடத்தினார். அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு வரியும் கூட்டப்படவில்லை. ஆனால் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் வரிகளை உயர்த்தினார்கள்.தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சியில் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக தந்தார். இந்த திட்டம் இன்னும் செயல்பட்டு வருகிறது.

ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்கு உழைக்கும் இயக்கம் ஒரே இயக்கம் அ.தி.மு.க. தான்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர்கள் ஜீவ கணேசன், இளமுருகன் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் ஞானையா, ஒன்றிய துணை செயலாளர் சின்னதுரை, மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல் , ஒன்றிய விவசாய அணி செயலாளர் பிள்ளைவிளை பால்துரை உள்ளிட்டோர் பேசினார்கள்.

கூட்டத்தில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர், சுதாகர் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் திருமணவேல், ஒன்றிய மாணவர் அணி செயலாளர் ஸ்டாலின் ஞான பிரகாசம், கடாச்சபுரம் ஞானமுத்து, சாத்தான்குளம் யூனியன் துணை சேர்மன் அப்பாதுரை , நிர்வாகிகள் சந்திரகுமார், நாகமணி, பெத்தேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News