உள்ளூர் செய்திகள்

கோவையில் அ.தி.மு.க. உறுப்பினரை பீர் பாட்டிலால் குத்திய பா.ஜ.க. உறுப்பினர் கைது

Published On 2022-07-09 15:17 IST   |   Update On 2022-07-09 15:17:00 IST
  • மகேஷ் குமார் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகாத வார்த்தைகளால் திட்டினார்.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி பத்ரசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை:

கோவை மாவட்டம் காரமடை தோலம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் குமார் (வயது 50). அ.தி.மு.க உறுப்பினர்.

இவர் தனது நண்பர்களுடன் விளங்காடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கிவிட்டு அருகில் இருந்த பாரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்அ ப்போது வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்த பா.ஜ.க உறுப்பினர் பத்ரசாமி (35) என்பவர் அங்கு வந்தார்.

அவரிடம் மகேஷ் குமார் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகாத வார்த்தைகளால் திட்டினார். இதில் ஆத்திரம் அடைந்த பத்ரசாமி பீர் பாட்டிலை எடுத்து மகேஷ் குமாரின் தலையில் ஓங்கி அடித்தார்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் 2 பேரையும் தடுத்து நிறுத்தி அங்கிருந்து வெளியேற்றினர். பின்னர் இருவரும் சாலையில் வந்து தகராறு ஈடுபட்டனர். அப்போது பத்ரசாமி மீண்டும் கீழே கிடந்த பீர் பாட்டிலை எடுத்து மகேஷ் குமாரை தகாத வார்த்தைகள் திட்டி குத்தினார்.

பலத்த காயம் அடைந்த மகேஷ் குமாருக்கு ரத்தம் கொட்டியது. இதனை கண்ட அவரது நண்பர்கள் மகேஷ் குமாரை மீட்டு தாயனூர் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து மகேஷ் குமார் காரமடை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி பத்ரசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News