உள்ளூர் செய்திகள்

அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தை முன்னிட்டு இன்று காலை பந்தக்கால் நடப்பட்டது.

அ.தி.மு.க. பொதுக்கூட்டத்திற்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி

Published On 2023-10-30 15:13 IST   |   Update On 2023-10-30 15:13:00 IST
  • திலகர்திடலில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
  • எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு பேசுகிறார்.

தஞ்சாவூர்:

அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்க விழாவை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைப்படி அ.தி.மு.க.வினர் கட்சி கொடியேற்றி வைத்தும், நலத்திட்ட உதவிகள் வழங்கியும், பொதுக்கூட்டம் நடத்தியும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தஞ்சாவூரில் வரும் 4-ம் தேதி (சனிக்கிழமை) மாலையில் திலகர்திடலில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது .

இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு பேசுகிறார்.

இதனை முன்னிட்டு பொதுக்கூட்டம் ஏற்பாடுகளை அ.தி.மு.க.வினர் செய்து வருகின்றனர். இந்த நிலையில் 4-ந் தேதி நடக்கும் பொதுக்கூட்டத்திற்கான பந்தக்கால் நடும் முகூர்த்தம் தஞ்சை திலகர் திடலில் இன்று காலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மத்திய மாவட்ட செயலாளர் மா.சேகர் தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் என்.எஸ்.சரவணன் முன்னிலை வகித்தார்.

விழாவில் பந்தக்காலுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர் அனைவரும் இணைந்து பந்தக்கால் நட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளர் ஆர்.காந்தி, கொள்கை பரப்பு துணை செயலாளர் துரை.திருஞானம், கரந்தை பஞ்சு, மருத்துவ கல்லூரி பகுதி நிர்வாகி மனோகர், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் நாகராஜன், கவுன்சிலர்கள் கோபால், காந்திமதி, மகளிரணி சித்ரா அங்கப்பன், நிர்வாகி முத்துமாறன், முன்னாள் மாவட்ட அம்மா பேரவை துணை தலைவர் ரெங்கப்பா, திராவிட கூட்டுறவு வங்கி இயக்குனர் மகேந்திரன், சிறுபான்மை பிரிவு தலைவர் ஜாபர், அம்மா பேரவை துணை தலைவர் பாலை ரவி, ரெங்கப்பா, கேபிள் செந்தில், தென்னரசன், பிள்ளையார்பட்டி சந்தானம், கடகடப்பை ராஜா, நாஞ்சிக்கோட்டை ஊராட்சி ஸ்டாலின் செல்வராஜ், ஐ.டி.விங்க் நடராஜன், மனோ சுப்பிரமணியன், பாண்டியன், முருகேசன், வெங்கடேஸ்வரன், பிரகதீஸ், சித்தார்த்தன், மாணவரணி முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News