உள்ளூர் செய்திகள்

ஆய்வு கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்ற காட்சி.

தூத்துக்குடி மாநகராட்சியில் 50 இடங்களில் மின் கோபுரங்கள் அமைக்க நடவடிக்கை- மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்

Published On 2022-12-31 09:17 GMT   |   Update On 2022-12-31 09:17 GMT
  • தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்க்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுள்ள வளர்ச்சி பணிகள் குறித்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
  • உயர் மின் கோபுரம் அமைக்கும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்க்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுள்ள மற்றும் நடைபெறப் போகும் வளர்ச்சி பணிகள் குறித்தும், புதிய வடிகால் வசதிகள், மற்றும் புதிய சாலைகள் அமையப் போகும் பகுதிகள் குறித்தும் கலந்தாய்வு கூட்டம் மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட மேயர் ஜெகன் பெரியசாமி, மேற்கு மண்டல தலைவர் அன்ன லெட்சுமி கோட்டு ராஜா, பகுதி செயலாளர் ரவீந்திரன், மாமன்ற உறுப்பினர்கள் கனகராஜ், இசக்கிராஜா, பொன்னப்பன்,ராமர், கண்ணன், ஜான் சீனிவாசன், கந்தசாமி, விஜயலெட்சுமி துரை, முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் ரவீந்திரன், ஆனந்தராஜ், நேர்முக உதவியாளர் ரமேஷ், பிரபாகரன், ஜாஸ்பர் மற்றும் நிர்வாகிகள், மாநகராட்சி அதிகாரிகள் துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோச னைகள் மேற்கொண்டார்.

தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் நடைபெறும் உயர் மின் கோபுரம் அமைக்கும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சென்று ஆய்வு செய்தார்.அப்போது அவர் கூறுகையில் தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சிறிய அளவிலான மின் கோபுர விளக்குகள் அமைத்துள்ளேன். தற்பொழுது தனியார் பங்களிப்புடன் மேலும் 30-க்கு மேற்பட்ட இடங்களில் இது போன்ற புதிய விளக்குகள் அமையப் பெறுகின்றது.

அதற்கான பணிகளையும், வி.வி.டி.சிக்னலின் எதிர்புறம் உள்ள நாம் தமிழர் வளாகம் பின்புறம் பணிகள் ஆரம்பமாகும் என்று கூறினார்.

பின்னர் தூத்துக்குடியில் நடைபெறும் புதிய வடிகால் பணிகள் மற்றும் 21வது வார்டுக்குட்பட்ட கோயிலில் இருந்து நீர் வெளியேற வசதியாக பைப் அமைத்து தர வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கை

குறித்தும், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஏற்கனவே இருந்த கழிப்பறையானது தூர்ந்து போய் இருப்பதாக வந்த தகவலையடுத்து புதிய கழிப்பறை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வதும் குறித்தும் ஆய்வுகளை மேற்கொண்டார்.

Tags:    

Similar News