உள்ளூர் செய்திகள்

ஆலாந்துறை அருகே பள்ளி சுற்றுச்சுவரை இடித்து உணவு பொருட்களை ருசித்த காட்டு யானை

Published On 2023-09-28 14:49 IST   |   Update On 2023-09-28 14:49:00 IST
  • இன்று அதிகாலை வனத்தை விட்டு ஒற்றை ஆண் காட்டு யானை ஒன்று வெளியேறியது.
  • யானை பள்ளி சுற்றுச்சுவரை இடித்த சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

வடவள்ளி,

ஆலாந்துறை அடுத்து முட்டத்து வயல் கிராமம் உள்ளது. இங்கு மலைவாழ் பழங்குடியினர் மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர்.

அங்கு மலைவாழ் பழங்குடியினர் மக்களின் குழந்தைகள் பயிலும் அரசு உண்டு உறைவிட பள்ளிக் கூடம் அமைந்துள்ளது.

இதுவனத்ைதயொட்டி பகுதி என்பதால் அடிக்கடி வனவிலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி இங்கு புகுந்து வருகின்றன. குறிப்பாக யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.

இந்த நிலையில் இன்று அதிகாலை வனத்தை விட்டு ஒற்றை ஆண் காட்டு யானை ஒன்று வெளியேறியது.

இந்த யானை ஊருக்குள் புகுந்து சுற்றி திரிந்தது. பின்னர் அங்குள்ள உண்டு உறைவிடப்பள்ளியின் அருகே சென்றது.

அங்கு பள்ளியின் 15 அடி உயர சுற்றுச்சுவரை உடைத்து தள்ளிவிட்டு பள்ளி வளாகத்திற்குள் நுழைந்தது.

பள்ளி வளாகத்திற்குள் நுழைந்த யானை அங்கு இருந்த பொருட்கள் வைக்க கூடிய இடத்திற்கு சென்றது. பின்னர் கதவை உடைத்து உள்ளே இருந்த அரிசி, பருப்பு போன்ற பொருட்களை எடுத்து ருசித்து சாப்பிட்டது.

இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து காட்டு யானையை வனத்திற்குள் அனுப்பும் பணியில் ஈடுபட்டனர்.

யானை பள்ளி சுற்றுச்சுவரை இடித்த சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News