உள்ளூர் செய்திகள்
விழுப்புரம் அருகே டயர் திருடிய வாலிபர் கைது
- விழுப்புரம் அருகே டயர் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- வெளியில் பொருட்களை வைத்துவிட்டு கடையினுள் அன்பழகன் உட்கார்ந்திருந்தார்.
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே உள்ள சூரப்பட்டையை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 32). அதே பகுதியில் ஹார்டுவேர்ஸ் கடை வைத்துள்ளார். இவரது கடையில் வெளியில் வைக்கப்படும் பொருட்கள் அடிக்கடி திருடு போனது. கடையை திறந்து வைத்து விட்டு வெளியில் பொருட்களை வைத்துவிட்டு கடையினுள் அன்பழகன் உட்கார்ந்திருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர் கடையில் ஆள் இல்லை என்று நினைத்து கடைக்கு வெளியில் வைத்திருந்த ஸ்கூட்டி டயரை திருடி எடுத்துச் செல்ல முயன்றாராம். அவரை கையுங்கலவுமாக பிடித்து கெடார் போலீசில் ஒப்படைத்தனர். இது குறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்படி டயர் திருடியவரிடம் விசாரணை நடத்தியதில், அவர் விழுப்புரம் திருப்பாச்சாவடி மேட்டை சேர்ந்த பிரகாஷ் (23) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.