மங்கலம்பேட்டையில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
- மங்கலம்பேட்டையில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.
கடலூர்:
விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை கர்னத்தம் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது.38), ஆசாரி. இவருக்கு கலை வாணி என்கிற மனைவியும், 2 குழந்தைகள் உள்ளனர். அந்த பகுதியில் உள்ள ஒரு வெல்டிங் பட்டறையில், வெல்டிங் வேலை செய்து வந்த கிருஷ்ணமூர்த்திக்கு குடிப் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சம்பவத் தன்று, கிருஷ்ணமூர்த்தி வேலைக்கு சென்று விட்டு மதியம் வீட்டுக்கு வந்தார். பின்னர், அன்று மாலை, வீட்டில் தூக்கில் தொங்கி னார்.
இதனைக் கண்ட அவரது மனைவி கலைவாணி, தாய் அலமேலு உள்ளிட்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, மங்கலம்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்திற்கு கொண்டு சென்ற னர். அங்கு, அவரை பரி சோதனை செய்த டாக்டர், கிருஷ்ணமூர்த்தி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரி வித்தார். இது குறித்து தகவல் அறிந்த மங்கலம்பேட்டை போலீஸ் உதவி ஆய்வாளர் தேவி, கிருஷ்ணமூர்த்தியின் உடலை கைப்பற்றி, விருத்தா சலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். இது குறித்து, கிருஷ்ண மூர்த்தி மனைவி கலை வாணி மங்கலம்பேட்டை போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.