உள்ளூர் செய்திகள்

சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்

Published On 2023-05-02 14:43 IST   |   Update On 2023-05-02 14:43:00 IST
  • மோகனூர் ஊராட்சி ஒன்றியம், வளையப்பட்டி, அரூர், பரளி, என்.புதுப்பட்டி, லத்துவாடி ஆகிய ஊராட்சிகளை உள்ளடக்கிய பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
  • அரசுக்கு சொந்தமான நிலங்களையும், விவசாயிகளின் நிலங்களையும் கையகப்படுத்துவதற்காக அதிகாரிகள் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஊராட்சி ஒன்றியம், வளையப்பட்டி, அரூர், பரளி, என்.புதுப்பட்டி, லத்துவாடி ஆகிய ஊராட்சிகளை உள்ளடக்கிய பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதையொட்டி அப்பகுதில் உள்ள அரசுக்கு சொந்தமான நிலங்களையும், விவசாயி களின் நிலங்களையும் கையகப்படுத்துவதற்காக அதிகாரிகள் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதியில் வசிக்கும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், தங்கள் நிலங்களை கையகப்படுத்தி னால், வாழ்வாதாரம் பாதிக்கும் என்றும், அப்பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைந்தால் சுற்றுச்சூழல் பாதிக்கும் என்றும், சிப்காட் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிடக்கோரி கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

பா.ஜ.க, கொ.ம.தே.க, தமிழக விவசாயிகள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இதற்காக சிப்காட் எதிர்ப்பு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மே தினத்தை முன்னிட்டு, மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சி களிலும், நேற்று கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. வளையப்பட்டி ஊராட்சி ரெட்டையாம்பட்டியில் கிராமசபை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், மோகனூர் ஒன்றியத்தில், சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். சிப்காட் தொழிற்பேட்டை அமைந்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். நிலத்தடி நீர், காற்று மாசு ஏற்படும். விவசாயமும் பாதிக்கப்படும். அதனால், இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என, விவசாயிகள் சார்பில் தீர்மானம் கொண்டுவர மனு அளித்தனர்.

தீர்மானத்தை பெற்றுக் கொண்ட ஊராட்சி தலைவர் சரஸ்வதி, கிராமசபை தீர்மான நோட்டில், சிப்காட் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என எழுதி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கடந்த கிராம சபை கூட்டத்தில், இதே தீர்மா னத்தை நிறைவேற்ற முடியாது என ஊராட்சி தலைவர் கூறியிருந்த நிலையில், நேற்று பொது மக்கள் வலியுறுத்திய தால் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Tags:    

Similar News