உள்ளூர் செய்திகள்

பள்ளத்தில் இறங்கிய தனியார் பஸ்சை படத்தில் காணலாம்.

கடலூர் அருகே பள்ளத்தில் இறங்கிய தனியார் பஸ்: பயணிகள் அலறல்

Published On 2023-06-21 09:01 GMT   |   Update On 2023-06-21 09:01 GMT
  • பூண்டியாங்குப்பம் அருகே தனியார் பஸ் வந்தபோது எதிரே லாரி ஒன்று வந்தது.
  • இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

கடலூர்:

கடலூரிலிருந்து சிதம்பரம் நோக்கி இன்று காலை தனியார் பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிெகாண்டு சென்றது. இந்நிலையில் விழுப்புரம்- நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் கடலூர் மாவட்டம் பூண்டியாங்குப்பம் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள சாலை மிக குறுகலாக உள்ளது. இதனையடுத்து பூண்டியாங்குப்பம் அருகே தனியார் பஸ் வந்தபோது எதிரே லாரி ஒன்று வந்தது. இதில் லாரி மீது மோதாமல் இருப்பதற்காக தனியார் பஸ் டிரைவர் சாலை ஓரமாக சென்றுள்ளார்.

அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரமாக இருந்த பள்ளத்தில் பஸ் இறங்கியது. இதில் பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் அலறினர். அதிர்ச்டவசமாக பள்ளத்தில் மழை பெய்ததில் சேரும் சகதியுமாக இருந்ததால் அதில் பஸ் இறங்கி கீழே சாயாதவாறு நின்றது. இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து பஸ்சில் இருந்து பயணிகளை மீட்டு மாற்று பஸ்சில் அவர்கள் செல்லும் இடங்களுக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த முதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு பள்ளத்தில் இறங்கிய பஸ்சை மீட்கும் முயற்ச்சியில் ஈடுபட்டு வந்தனர். இதனால் அந்த பகுதி பரபரப்பாக இருந்தது.

Tags:    

Similar News