உள்ளூர் செய்திகள்

பாபநாசம் பகுதியில் மயில்கள் சரணாலயம் அமைக்க வேண்டும்

Published On 2023-03-27 09:27 GMT   |   Update On 2023-03-27 09:27 GMT
  • பாபநாசம், கும்பகோணம் ஆகிய பகுதிகளில் மயில்கள் அதிக அளவில் உள்ளன.
  • டெல்டா பகுதியில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மயில்கள் காணப்படுகின்றன.

பாபநாசம்:

தமிழகத்தில் விராலிமலை, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் மயில்கள் அதிகமாக காணப்படு கின்றன.

தற்போது டெல்டா மாவட்டமான தஞ்சாவூர், திருவாரூர் பகுதிகளில் மயில்கள் அதிக அளவில் காணப்படுகிறது.

குறிப்பாக தஞ்சை மாவட்டம் பாபநாசம், கும்பகோணம், வலங்கைமான், திருமானூரில் இருந்து அணைக்கரை வரை உள்ள கொள்ளிட கரை ஆகிய பகுதிகளில் மயில்கள் அதிக அளவில் உள்ளன.

கர்நாடகா மாநிலத்தில் பங்குபூர், ஆதிசிந்தனகிரியிலும், மராட்டிய மாநிலத்தில் நெய்கானிலும் மயில்கள் சரணாலயம் அமைந்துள்ளன.

இதுகுறித்து இயற்கை ஆர்வலர்கள் கூறுகையில், பாபநாசம், கும்பகோணம், வலங்கைமான், குடவாசல் பகுதிகளில் அதிக அளவில் காணப்படுகின்றன.

மயிலுக்கு நெல் மிகவும் பிடித்தமான உணவு.

இவை மற்ற பறவைகளைப் போல சட்டென்று வேகமாக பறந்து செல்லாது. டெல்டா பகுதியில் சுமார் 2000க்கும் மேற்பட்ட மயில்கள் காணப்படுகின்றன.

மேலும், மயில்களை பொருத்த வரை குடியிருப்பு பகுதிகளை ஒட்டியுள்ள காடுகளில் அதிகம் காணப்படுகின்றன.

இவை உணவு மற்றும் குடிநீா்த் தேடி விவசாய தோட்டத்திற்கும் குடியிருப்புப் பகுதிக்குள் செல்லும் மயில்கள் சாலையைக் கடக்கும்போது வாகனங்கள் மோதியும் உயிரிழக்கின்றன.

இது போன்று அழிந்து வரும் மயில் இனத்தை பாதுகாக்க தஞ்சை மாவட்டத்தில் உள்ள மயில்களை கணக்கெடுத்து, மயில்கள் அதிக அளவு காணப்படும் பாபநாசம் பகுதியில் சரணாலயம் அமைக்க தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்களும், இப்பகுதி பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News