உள்ளூர் செய்திகள்

நீலகிரியில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற திருவிழா

Published On 2023-07-18 14:01 IST   |   Update On 2023-07-18 14:01:00 IST
  • நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் படுகர் இன மக்களுக்கான ஹிரோடைய்யா திருவிழா நடந்தது.
  • இக்கோவில்கள் ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் நடைதிறக்கப்படுவது வழக்கம்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் படுகர் இன மக்களுக்கான ஹிரோடைய்யா திருவிழா நடந்தது. இதில் தொதநாடு சீமையை தலைமையிடமாக கொண்ட கடநாடு, ஒன்னதலை, கக்குச்சி, பனஹட்டி மற்றும் டி.மணியட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த பழங்குடி மக்கள் பாரம்பரிய உடை அணிந்தபடி உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.

இதன் ஒரு பகுதியாக அவர்கள் சங்கொலி எழுப்பியபடி அந்தந்த பகுதிகளில் உள்ள காட்டுக்கோவில்களுக்கு ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர். அந்த கோவில்கள் ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் நடைதிறக்கப்படுவது வழக்கம்.

ஹிரோடைய்யா திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பிரம்புகளை உரசி அதில் இருந்து வெளியேறிய தீப்பொறியில் நெய் தீபம் ஏற்றி இறைவனை வழிபட்ட னர். அப்போது கன்றுக் குட்டி ஈன்ற பசு மாட்டின் பால், கொம்புத்தேன் மற்றும் தும்பை ஆகியவை படைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அதன்பிறகு ஆண் பக்தர்கள் மட்டும் காணிக்கை செலுத்தி அய்யனை வழிபட்டனர். அதன்பிறகு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து பக்தர்கள் வன கோவிலில் இருந்து மீண்டும் சங்கொலி எழுப்பியபடி, அந்தந்த கிராமங்களுக்கு ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர். இந்த கோவில்களில் பெண் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News