தமிழக அரசின் ஓய்வூதிய திட்டம் தேர்தல் கால வாக்குறுதிக்கு எதிரானது - ஜி.கே.வாசன்
- தமிழக அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அப்படியே அமல்படுத்தாதது ஏமாற்றம் அளித்துள்ளது.
- தமிழக அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் தராது.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழக அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அப்படியே அமல்படுத்தாதது ஏமாற்றம் அளித்துள்ளது. திமுக 2021 சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதி எண். 309 ல் புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு, பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்தது. பழைய ஓய்வூதியத் திட்டம் என்பது அரசு ஊழியர்களிடம் சந்தா பிடிக்காத திட்டம்.
பங்களிப்பு ஓய்வூதியம் என்பது பணத்தைப் பிடித்துக்கொண்டு அதற்கும் வட்டி தருகிறது. அவர்களும் பங்களிப்பு செய்கிறார்கள். அதற்கும் வட்டி தருகிறார்கள். அனைத்தையும் அதாவது முதலீட்டு பணத்தை தருவதாக அமைகிறது. ஆனால் தமிழக அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் தராது.
இந்நிலையில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் உத்தரவாத ஓய்வூதியத்தால், பழைய ஓய்வுதியத் திட்டத்தின் முழுப் பயன் கிடைக்காது என்கின்றனர். எனவே தமிழக அரசு சுமார் 6½ லட்சம் ஆசிரியர்களையும் மற்றும் அரசு ஊழியர்களையும், தேர்தல் கால வாக்குறுதியையும் கவனத்தில் கொண்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.