மலை உச்சியில் உள்ள தூண் தர்காவிற்கு சொந்தமானது என்ற அரசின் வாதம் தவறானது - ஐகோர்ட் கிளை
- அனைத்து இந்துக்களும் பார்க்க வேண்டும் என்றே உச்சியில் தீபம் ஏற்றப்படுகிறது.
- திருப்பரங்குன்றம் தீப வழக்கு அரசியல் நோக்கில் பார்க்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் இன்று தீர்ப்பளித்தனர்.
தீபத்தூண் தேவஸ்தானத்திற்கு சொந்தமான இடத்திலேயே உள்ளது என்று கூறிய நீதிபதிகள் தனி நீதிபதி உத்தரவிற்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
* திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் வாதம் ஏற்கத்தக்கதாக இல்லை.
* பொது அமைதி பாதிக்கும் என்ற அரசு தரப்பின் வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
* மலை உச்சியில் உள்ள தூண் தர்காவிற்கு சொந்தமானது என்ற வாதமும் தவறானது.
* அனைத்து இந்துக்களும் பார்க்க வேண்டும் என்றே உச்சியில் தீபம் ஏற்றப்படுகிறது.
* பொது அமைதி பாதிக்கப்படும் என அரசு கூறுவது யூகத்தின் அடிப்படையிலானது.
* கோவிலுக்கு சொந்தமான இடத்தில் தீபம் ஏற்றுவதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பது அர்த்தமற்றது.
* பொது அமைதிக்கு ஏற்பட்ட பிரச்சனைக்கு அரசே காரணம்.
* திருப்பரங்குன்றம் தீப வழக்கு அரசியல் நோக்கில் பார்க்கப்பட்டுள்ளது.
* தனிநீதிபதி உத்தரவு பிறப்பித்த போதே தீபம் ஏற்றி இருந்தால் இந்த பிரச்சனை ஏற்பட்டு இருக்காது.
* திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தேவஸ்தானம் தீபம் ஏற்ற வேண்டும். சண்டை போடக்கூடாது என்று உத்தரவிட்டனர்.