உள்ளூர் செய்திகள்
குனியமுத்தூர் அருகே கஞ்சா, போதை மாத்திரை விற்றவர் கைது
- சுண்ணாம்பு காலவாயை சேர்ந்த பைசல் ரகுமான் சிக்கினார்
- இவர் மீது ஏற்கனவே போதை மாத்திரை, கஞ்சா பதுக்கிய வழக்குகள் உள்ளது
கோவை,
கோவை கரும்புக்கடை சேரன் நகரில் உள்ள பிளாஸ்டிக் கம்பெனி அருகே சிலர் போதை மாத்திரை மற்றும் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக குனியமுத்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்துக்கு சென்றனர். அங்கு கஞ்சா மற்றும் போதை மாத்திரையை பதுக்கி வைத்து விற்பனை செய்த சுண்ணாம்பு காலவாயை சேர்ந்த பைசல் என்ற பைசல் ரகுமான் (வயது 26) என்பவரை கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே போதை மாத்திரை மற்றும் கஞ்சாவை பதுக்கி வைத்த வழக்குகள் உள்ளது.
பைசலிடம் இருந்து விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 200 கிராம் கஞ்சா மற்றும் 120 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பின்னர் குனியமுத்தூர் போலீசார் கைது செய்யப்பட்ட பைசலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.