காரைக்காலில் பட்டதாரி இளைஞர் தூக்கு போட்டு தற்கொலை
- ஸ்டாலின் அஜய், நேருநகர் பாரதியார் சாலையில் உள்ள சித்தி போலீஸ் ஏட்டு செல்வி என்பவர் வீட்டில் வசித்து வந்தார்.
- வீட்டு அறையில் உள் தாள்ப்பால் போட்டு கொண்டு இருந்தார்.
புதுச்சேரி:
காரைக்கால் நகர் பகுதி யான நேருநகர் அன்னை தெரசா நகரைச்சேர்ந்தவர் நெல்சன்-ஜெயமேரி. இவர்களுக்கு ஸ்டாலின் அஜய் (வயது28), அபினேஷ் ராஜ் (26). ஆகிய மகன்கள் இருந்தனர். ஸ்டாலின் அஜய் தனியார் வங்கியில் வேலை செய்து வந்தார். ஸ்டாலின் அஜய், நேருநகர் பாரதியார் சாலையில் உள்ள சித்தி போலீஸ் ஏட்டு செல்வி என்பவர் வீட்டில் வசித்து வந்தார். அடிக்கடி பெற்றோர் வீட்டுக்கு ஸ்டாலின் அஜய் சென்று வருவது வழக்கம். ஸ்டாலின் அஜய் சித்தி வீட்டில் இருக்கும் போது, வீட்டு அறையை உள்பக்க மாக மூடிகொண்டு இருப்பது வழக்கமாம்.
இந்நிலையில், ஸ்டாலின் அஜய் வேலைக்கு போகா மல், வீட்டு அறையில் உள் தாள்ப்பால் போட்டு கொண்டு இருந்தார். மாலை வரை ஸ்டாலின் அஜய் வெளியே வராததால், சித்தி மற்றும் பெற்றோர் சந்தேகம் அடைந்து, கதவை தட்டினர். திறக்காததால், கதவை உடைத்துகொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, மின்விசிறியில் ஸ்டாலின் அஜய் புடவையில் தூக்கில் தொங்கினார். இது குறித்து, அபினேஷ் ராஜ் காரைக்கால் நகர போலீசில் புகார் கொடுத் தார். அதன்பேரில், போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.