உள்ளூர் செய்திகள்

தவணை கட்டாதவரை நிதி நிறுவன ஊழியர் தாக்கும் சி.சி.டி.வி. காட்சி.

பண்ருட்டியில் தவணை தொகை கட்டாத ஆசாரியை தாக்கிய நிதி நிறுவன ஊழியர் மீது வழக்கு

Published On 2023-05-24 14:51 IST   |   Update On 2023-05-24 14:51:00 IST
  • நடராஜன் கடந்த 2 ஆண்டுக்கு முன் டி.வி.எஸ்., கம்பெனியில் தவணை முறையில் மோட்டார் சைக்கிள் வாங்கினார்.
  • ஆண்டிக்குப்பம் பெட்ரோல் பங்கில் நடராஜன் பெட்ரோல் போட்டுக்கொண்டிருந்தார்.

கடலூர்:

பண்ருட்டி அருகே கடன் தவணை கட்டாத வரை தாக்கிய ஊழியர் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர். பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டையை சேர்ந்தவர் நடராஜன் (வயது 46). ஆசாரி வேலை செய்யும் இவர் கடந்த 2 ஆண்டுக்கு முன் டி.வி.எஸ்., கம்பெனியில் தவணை முறையில் மோட்டார் சைக்கிள் வாங்கினார். வாகனம் வாங்கியதற் கான தவணை தொகையை சரியாக கட்டி முடித்ததால் டி.வி.எஸ்., கிரிடிட் கம்பெனி மூலம் பர்சனல் லோன் ரூ.50 ஆயிரம் நடராஜனுக்கு வழங்கினர்.

இதற்கான மாத தவணை தொகையை சரியாக கட்டவில்லை. நேற்று முன்தினம் புதுப்பேட்டை செல்லும் சாலையில் உள்ள ஆண்டிக்குப்பம் பெட்ரோல் பங்கில் நடராஜன் பெட்ரோல் போட்டுக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த டி.வி.எஸ்., பைனான்ஸ் வசூல் ஊழியர் விக்னேஷ், ந-டராஜனிடம் தவணை தொகை கேட்டார். இதில் விக்னேஷ்க்கும் நடராஜனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, விக்னேஷ் நடராஜனை தாக்கினார். இதனால் காயமடைந்த நடராஜன் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவர் அளித்த புகாரின் பேரில், விக்னேஷ் மீது பண்ருட்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News