உள்ளூர் செய்திகள்

பண்ருட்டி அருகே மோட்டார் சைக்கிளில் சென்றவரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

Published On 2023-04-12 14:18 IST   |   Update On 2023-04-12 14:18:00 IST
  • தமிழரசன் (வயது 31). இவர் நேற்று தனது குழந்தையை அழைத்து வர மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
  • தன்ராஜ் அவரது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்துள்ளார்.

கடலூர்:

பண்ருட்டி அடுத்த பனப்பாக்கம் பாட்டை தெரு கலியமூர்த்தி மகன் தமிழரசன் (வயது 31). இவர் நேற்று தனது மாமியார் வீட்டில் இருந்து தனது குழந்தையை அழைத்து வர பணப்பாக்கம் மெயின் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே பனப்பாக்கம் காலணியை சேர்ந்த தன்ராஜ் அவரது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்துள்ளார். இரவு நேரத்தில் எதற்கு இவ்வளவு வேகமா போறீங்க என தமிழரசன் கேட்டுள்ளார். இதில் ஏற்பட்ட வாக்குதம் தகராறாக மாறியது. இதில் தன்ராஜ், பாலமுருகன், சூர்யா ஆகியோர் தமிழரசன் மீது தாக்குதல் நடத்தினர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த தமிழரசன் பண்ருட்டி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கடலூருக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது பற்றி தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News