உள்ளூர் செய்திகள்

திருவாரூரில் 900 அரசு ஊழியர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம்

Published On 2023-05-11 09:56 GMT   |   Update On 2023-05-11 09:56 GMT
  • தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தின் போராட்ட காலங்களில் வரன்முறை செய்து ஆணை வெளியிட வேண்டும்.
  • மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்ட கணினி உதவியாளர்களின் பணி வரன்முறை ஆணையை வெளியிட வேண்டும்.

திருவாரூர்:

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி துறை மாநில நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தையின் போது ஏற்றுக்கொண்ட ஊராட்சி செயலாளருக்கு பணி விதிகளை மேலும் காலதாமதம் இன்றி வெளியிடுதல் மற்றும் விடுபட்ட உரிமைகளை உடனடியாக வழங்க வேண்டும், மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்ட கணினி உதவியாளர்களின் பணி வரன்முறை ஆணையை வெளியிட வேண்டும், இணை இயக்குனர் உதவி இயக்குனர் உதவி பொறியாளர் உதவி பொறியாளர் மற்றும் இளநிலை பொறியாளர் நிலையிலான அனைத்து பதவி உயர்வு ஆணைகளையும் உடனடியாக வெளியிட வேண்டும்.

கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது அரசு ஊழியர்களின் போராட்ட காலங்கள் வேலை நாட்களாக கருதி ஆணையிடப்படும் என அளித்த வாக்குறுதியின் படி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தின் போராட்ட காலங்களில் வரன்முறை செய்து ஆணை வெளியிட வேண்டும் ஊராட்சி செயலர்களுக்கு மாத மாதம் ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய தற்செயல் விடுப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது

அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டத்தில் தமிழக அரசு மாநில நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தையின் போது ஏற்றுக்கொண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 900-க்கும் மேற்பட்ட தமிழ்நாடு அரசு ஊழக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் மாவட்டம் முழுவதும் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

Tags:    

Similar News