உள்ளூர் செய்திகள்

படுகாயம் அடைந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது எடுத்த படம்.

மரக்கிளை முறிந்து விழுந்து 6 பெண்கள் படுகாயம்

Published On 2023-09-02 10:05 GMT   |   Update On 2023-09-02 10:05 GMT
  • 200-க்கும் மேற்பட்ட பெண்கள் கால்வாயை தூர்வாரி அதை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
  • மரத்தின் கிளை ஒன்று 6 பெண்கள் மேல் விழுந்ததாக கூறப்படுகிறது.

பாப்பிரெட்டிப்பட்டி,

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மெணசி பகுதியில் மகாத்மா ஊரக 100 நாள் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ஏரி வேலை கால்வாய் தூர்வாருதல் , ஏரிகளை புணரமைப்பு செய்தல் மற்றும் விவசாய பணிகள் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் நேற்று மெணசி கிராமத்தில் கால்வாய் ஒன்றில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் கால்வாயை தூர்வாரி அதை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கால்வாய் பகுதியிலிருந்த காய்ந்த மரத்தின் கிளை ஒன்று வேலை செய்து கொண்டிருந்த முத்தம்மாள் (55), பாப்பாத்தி (50) உள்ளிட்ட 6 பெண்கள் மேல் விழுந்ததாக கூறப்படுகிறது. மரக்கிளை விழுந்து படுகாயம் அடைந்த 6 பேரை அங்கிருந்தவர்கள் மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அதில் இரண்டு பேரை மட்டும், தீவிர சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவலறிந்த பாப்பிரெட்டிப்பட்டி காவல் ஆய்வாளர் லதா, வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் படுகாயம் அடைந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மரக்கிளை விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags:    

Similar News