உள்ளூர் செய்திகள்
தென்காசி மாவட்டத்தில் ஒரே நாளில் 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது
- தென்காசி மாவட்டத்தில் குற்றவழக்கில் சம்பந்தப்பட்டவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரை செய்தார்.
- குருவையா உள்பட 5 பேரை சிறையில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் பல்வேறு குற்றவழக்கில் சம்பந்தப்பட்டவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் பரிந்துரை செய்தார்.
அதன் பேரில் புளியங்குடி போலீஸ் நிலைய கொலை வழக்கின் குற்றவாளிகளான குருவையா (வயது 40), சின்ன மாரியப்பன் (36), செங்கோட்டை போலீஸ் நிலைய அடிதடி, கொலைமுயற்சி, கொள்ளை போன்ற வழக்கின் குற்றவாளியான சுபாஷ்கண்ணன் (24), சங்கரன்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் போக்சோ வழக்கின் குற்றவாளியான ரகு (37) மற்றும் ஆலங்குளம் போலீஸ் நிலைய கஞ்சா வழக்கின் குற்றவாளியான ராசு என்கிற செல்வராஜ் (34) ஆகிய 5 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி கைது செய்யப்பட்ட 5 பேரையும் போலீசார் பாளை சிறையில் அடைத்தனர்.