உள்ளூர் செய்திகள்

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி: கிருஷ்ணகிரியில் ரங்கோலி கோலம்

Published On 2022-07-17 14:50 IST   |   Update On 2022-07-17 14:50:00 IST
  • 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது.
  • இந்த கோலத்தை பொதுமக்கள் பார்வையிடும் நிகழ்ச்சியை நகராட்சி தலைவர் பரிதாநவாப் தொடங்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி,

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வருகிற 28&ந் தேதி முதல் ஆகஸ்ட் 10&ந் தேதி வரை 44&வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது.

இதனை பொதுமக்களிடம் பிரபலப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கையினை எடுத்து வருகிறது.

இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி செல்பி எடுத்தும், கிருஷ்ணகிரியில் நடந்து வரும் ௨௮-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சியில், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில், நவீன எல்இடி வாகனம்மூ லமாகவும் எனவும் பல்வேறு வகையில் பிரபலப்படுத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி நகராட்சி நிர்வாகம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் இணைந்து, நகராட்சி அலுவலக வளாகத்தில் ரங்கோலி கோலம் போட்டு பிரபலப்படுத்தப்பட்டது.

இந்த கோலத்தை பொதுமக்கள் பார்வையிடும் நிகழ்ச்சியை நகராட்சி தலைவர் பரிதாநவாப் தொடங்கி வைத்தார்.

இதில் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) சரவணன், சுகாதார அலுவலர் மோகனசுந்தரம், சுகாதார ஆய்வாளர்கள் சந்திரகுமார், உதயகுமார், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி, சுகாதார துப்புரவு மேற்பார்வையாளர் ரேஷ்மா, கவுன்சிலர்கள் பாலாஜி, முகமதுஆஷிப், தேன்மொழி மாதேஷ், சீனிவாசன், அங்கன்வாடி பணியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News